முதல் வாரத்திலேயே வெடித்த பெரிய சண்டை.. இந்த சீசன் அஸீம் இவர்தானா?
பிக் பாஸ் 7ம் சீசன் தொடங்கி சில தினங்கள் கூட ஆகவில்லை, அதற்குள் பெரிய சண்டை வர தொடங்கி இருக்கிறது. பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என மொத்தம் இரண்டு வீடுகள் ஷோவில் இருக்கிறது. ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் நபர்கள் தான் சமையல், க்ளீனிங் உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும் என சொல்லப்பட்டு இருக்கிறது.
பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் யாரும் ஸ்மால் பாஸ் வீட்டுக்குள் செல்லவும் கூடாது, வேலை செய்வதில் உதவி செய்யவும் கூடாது என ரூல்ஸ் போடப்பட்டு இருக்கிறது. அதை மீறி விசித்ரா மற்றும் யுகேந்திரன் ஆகியோர் ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் கிச்சனுக்கு சென்று சமையல் செய்தனர்.
வெடித்த சண்டை
விதியை மீறியதால் விசித்ரா மற்றும் யுகேந்திரன் ஆகிய இருவரும் இனி ஸ்மால் பாஸ் வீட்டில் தான் இருக்க வேண்டும் என தண்டனை கொடுத்தார் பிக் பாஸ்.
அவர்கள் அங்கு போய்விட்டால் grocery ஷாப்பிங் செய்ய வாங்கிய கடன் தொகையை திரும்ப செலுத்துவதில் சிக்கல் வரலாம் என பிக் பாஸ் கூறுகிறார். அதை கேட்ட பிரதீப் 'ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் இரண்டு பேரை இங்கே அனுப்பிடுங்க' என கேட்கிறார்.
அதனால் கோபப்பட்டு விசித்ரா அவரிடம் சண்டை போடுகிறார். ஒருகட்டத்தில் பலரும் பிரதீப்பை தாக்கி பேச அவர் கோபத்தில் உச்சிக்கே சென்றுவிட்டார். இந்த சீசன் அஸீம் இவர் தான் என நம்மை யோசிக்கவைக்கும் அளவுக்கு சில விஷயங்களை செய்தார்.
சமையல் செய்யும் டீமிடம் சென்று தனக்கு சிக்கன் fry செய்து திரும்படி கேட்கிறார். மெனுவில் என்ன இருக்கிறதோ அதை தான் செய்ய முடியும் என அவர்கள் கூற அங்கும் வாக்குவாதம் தொடங்குகிறது.
நான் grocery ஷாப்பிங்கில் சிக்கன் வாங்கி கொடுத்திருக்கிறேன், அதை இன்றே எனக்கு செய்து கொடுங்க, அல்லது எல்லா பொருளையும் எனக்கு திருப்பி கொடுங்க என சண்டையை தொடங்கிவிட்டார் பிரதீப்.
அவருக்கு எதிராக மற்ற போட்டியாளர்கள் பலரும் இருக்கின்றனர். அதனால் இனி வரும் நாட்களில் இன்னும் பெரிய சண்டைகள் வரலாம்.