செருப்பால அடிப்பேன்.. கோபத்தின் உச்சத்தின் கூல் சுரேஷ்.. ப்ரோமோ வீடியோ
பிக் பாஸ்
பிக் பாஸ் சீசன் 7ல் இன்றைய நாளின் முதல் ப்ரோமோவே மிகவும் பரபரப்பாக இருந்தது.
இதில் கூல் சுரேஷுக்கும் பிரதீப்பிற்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக நான் வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என கூல் சுரேஷ் கூறினார். இதை தொடர்ந்து தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இந்த இரண்டாவது ப்ரோமோவில் கூல் சுரேஷை பார்த்து தமிழன்டா வா ச்சி என பிரதீப் கூற, சண்டை ஆரம்பம் ஆகிறது.
கோபத்தின் உச்சத்தின் கூல் சுரேஷ்
இதன்பின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் கடுமையாக கூல் சுரேஷை பார்த்து சில்ற பய என பிரதீப் கூறுகிறார்.
மேலும் வாடா போடா என்று பேசுகிறார். இதனால் கடுப்பாகும் கூல் சுரேஷ் 'செருப்பால அடிப்பேன்' என்ற வார்த்தையை கூறுகிறார்.
இதன்பின் யார் என்ன சொல்ல தன்னிடம் வந்தாலும் கூட அவர்களுக்கு மரியாதை தராமல் பேசுகிறார் பிரதீப். இதோ இரண்டாவது ப்ரோமோ வீடியோ..