திடீரென கண்கலங்கி அழுத பிரதீப்.. காரணம் என்ன.. பிக் பாஸ் மூன்றாவது Promo
கண்கலங்கிய பிரதீப்
பிக் பாஸ் 7 இன்றை நாளின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் பிரதீப் ஆண்டனி பவா செல்லதுரையிடம் உருக்கமாக பேசி கண்கலங்கி அழுகிறார்.
'நீங்க செய்யும் செயல்களை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதை மற்ற அனைவரும் ஏற்று கொள்வார்களா என தெரியவில்லை. நீங்க என் கூட இருக்கணும்னு நான் நினைக்கிறன். அதனால், உங்களை கொஞ்சம் மாற்றிக்கொங்க' என கூறுகிறார் பிரதீப்.
பவா செல்லத்துரையின் பதில்
இதற்கு பவா செல்லத்துரை, 'என்னுடைய இயல்பை யாருக்காகவும் நான் மாற்றிக்கொள்ள மாட்டேன். என் முன் கடவுள் வந்த நின்றாள் கூட நான் இப்படி தான் இருப்பேன்' என கூறிவிடுகிறார்.
மோதலும், வாக்குவாதங்களாக சென்று கொண்டிருந்த பிக் பாஸ் தற்போது சற்று உருக்கமாக மாறியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் அடுத்த என்ன நடக்க போகிறது என்று.
மூன்றாவது ப்ரோமோ இதோ..