மூடிக்கிட்டு உக்காரு.. பிரதீப் மீது உச்சகட்ட கோபத்தில் நிக்சன்.. பிக் பாஸ் ப்ரோமோ
உச்சகட்ட கோபத்தில் நிக்சன்
பிக் பாஸ் சீசன் 7ன் இன்றைய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் வழக்கம் போல் ஒரு புதிய சண்டை வெடித்துள்ளது. ஆனால், வழக்கத்துக்கு மாறாக சற்று உச்சகட்ட கோபத்தில் நிக்சன் இருக்கிறார்.
[
பிரதீப் மற்றும் நிக்சன் இடையே வெடித்த இந்த மோதலுக்கு பிரதீப் கூறிய வார்த்தை தான் காரணம் என்கின்றனர். நிக்சனுக்கு தகுதியே இல்லை என பிரதீப் கூறியதால் கோபத்தின் உச்சத்திற்கு சென்றுவிட்டார் நிக்சன்.
முதல் ப்ரோமோ
என்னை பார்த்து தகுதி இல்லை என சொல்ல உனக்கு கொஞ்சம் கூட தகுதியே இல்லை. பாட்டு பாடி, உழைத்து இங்கே வந்து இருக்கிறேன். நீ ஆடுறது போல் ஒரு கேவலமான கேம் ஆடி வெற்றிபெற வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.
பாடிக்காட்டு, ஆடிக்காட்டு என்று எல்லாம் சொல்லாத, உனக்கு வரலையா மூடிக்கிட்டு உக்காரு. என கூறுகிறார். ஒவ்வொரு நாளும் பிரதீப் ஒவ்வொரு போட்டியாளரிடமும் சண்டை போட்டுக்கொன்டே இருக்கிறார். இது எங்கு போய் முடிய போகிறதோ தெரியவில்லை.
ப்ரோமோ வீடியோ..