லவ் டுடே வெற்றிக்கு பின் அதிகரித்த பிரதீப் ரங்கநாதத்தின் சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா
லவ் டுடே
கடந்த ஆண்டு வெளிவந்த எதிர்பார்க்காத அளவில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் லவ் டுடே.
பிரதீப் ரங்கநாதன் இப்படத்தில் நடித்து, இயக்கி இருந்தார். யுவன் இசையில் உருவான இப்படத்தில் இவானா, சத்யராஜ், ராதிகா சரத்குமார் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

உலகளவில் இப்படம் ரூ. 90 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சம்பளம்
இந்நிலையில், லவ் டுடே படத்தை தயாரித்திருந்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தையும் பிரதீப் ரங்கநாதன் தான் இயக்குகிறாராம்.
இப்படத்திற்காக பிரதீப் ரங்கநாதனுக்கு ரூ. 3 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

லவ் டுடே படத்திற்காக ரூ. 1.50 கோடி சம்பளம் வாங்கிய பிரதீப் ரங்கநாதனுக்கு லவ் டுடே தேதி தந்த வெற்றியால், அந்த சம்பளம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.
திடீரென மாற்றப்பட்ட வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி.. எப்போது தெரியுமா
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri