சிம்பு நடிக்க இருந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன்? லவ் டுடே வெற்றிக்கு பின் அடுத்த படம்

By Parthiban.A Jan 30, 2023 01:40 PM GMT
Report

கொரோனா குமார்

சிம்பு தற்போது மாநாடு வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் மூலமாக தொடர் ஹிட் கொடுத்து இருக்கிறார். அவர் அடுத்து கொரோனா குமார் என்ற படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் அந்த படத்தின் ஷூட்டிங் நீண்ட காலமாக தொடங்காமல் இருந்தது. அதனால் சிம்பு கொரோனா குமார் படத்திலிருந்து வெளியேறிவிட்டார் என்று செய்தி பரவியது. ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.

சிம்பு பத்து தல ஷூட்டிங்கில் பிசியாக இருந்ததால் இயக்குனர் கோகுல் கொரோனா குமார் படத்தை ஒதுக்கிவைத்துவிட்டு RJ பாலாஜி நடிப்பில் சிங்கப்பூர் சலூன் படத்தை இயக்க சென்றுவிட்டார்.

சிம்பு நடிக்க இருந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன்? லவ் டுடே வெற்றிக்கு பின் அடுத்த படம் | Pradeep Ranganathan Replace Simbu In Corona Kumar

பிரதீப் ரங்கநாதன்

சமீபத்தில் லவ் டுடே படத்தின் மூலமாக ஒட்டுமொத்த இந்திய சினிமா துறையையும் திரும்பி பார்க்க வைத்த பிரதீப் ரங்கநாதன் தான் கொரோனா குமார் படத்தில் நடிக்க போகிறார் என தகவல் தற்போது பரவி வருகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வேல்ஸ் நிறுவனம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

சிம்பு நடிக்க இருந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன்? லவ் டுடே வெற்றிக்கு பின் அடுத்த படம் | Pradeep Ranganathan Replace Simbu In Corona Kumar

தளபதி67 அதிகாரப்பூர்வ அறிவிப்பு! Crew விவரம் இதோ.. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US