Dude படத்தில் நடிக்க ஹீரோ பிரதீப் ரங்கநாதன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
பிரதீப் ரங்கநாதன்
லவ் டுடே என்கிற படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை தந்தவர் பிரதீப் ரங்கநாதன். இந்த வெற்றி அவருக்கென்று தனி மார்க்கெட்டை திரையுலகில் உருவாக்கியது.
இதை தொடர்ந்து வெளிவந்த டிராகன் படமும் பிளாக்பஸ்டர் வெற்றியடைய, தொடர் வெற்றி நாயகனாக பார்க்கப்பட்டார். இதனால் Dude படத்தின் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
கடந்த 17ஆம் தேதி திரைக்கு வந்த Dude படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கூட, உலகளவில் இரண்டே நாட்களில் ரூ. 40 கோடி வசூலித்துவிட்டது.
சம்பளம்
இந்த நிலையில், Dude படத்தில் நடிப்பதற்காக பிரதீப் ரங்கநாதன் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் இப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 5 முதல் ரூ. 6 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.