முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை உயர்த்திய பிரதீப் ரங்கநாதன்.. 100 கோடி வசூல் செய்த ஹீரோனா சும்மாவா
பிரதீப் ரங்கநாதன்
கோமாளி படம் தான் பிரதீப் ரங்கநாதனுக்கு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இப்படத்தின் வெற்றிக்கு பின் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தானே இயக்கி, நடித்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார்.
இவர் நடித்த முதல் படமே ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை தயாரிக்க 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் இடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்கின்றனர்.
முதலில் இப்படத்தை கமலின் ராஜ் கமல் நிறுவனம் தான் தயாரிப்பதாக இருந்துள்ளது. ஆனால், படத்தின் பட்ஜெட் கேட்டு ராஜ் கமல் நிறுவனம் அதிர்ச்சியடைந்து விட்டார்களாம். விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதனின் இப்படத்தின் பட்ஜெட் மட்டுமே ரூ. 60 கோடி என கூறப்படுகிறது.
சம்பளம்
இதில் இயக்குனர் விக்னேஷ் சிவனின் சம்பளம் ரூ. 10 கோடியும், ஹீரோவாக நடிக்க பிரதீப் ரங்கநாதத்தின் சம்பளம் ரூ. 20 கோடி என்கின்றனர். இதனால் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க ஓகே சொல்லவில்லை. இதனால் தற்போது இப்படத்தை கையில் எடுக்க 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் மும்முரமாக உள்ளார்களாம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என கூறப்படுகிறது.
இதில் குறிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம் லவ் டுடே படத்திற்காக ரூ. 1.5 கோடி வரை சம்பளம் வாங்கிய பிரதீப் ரங்கநாதன், அப்படத்தின் வெற்றிக்கு பின் தற்போது ரூ. 20 கோடி சம்பளம் வாங்கும் இடத்திற்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.