ரஜினி படத்திலிருந்து வெளியேறிய இயக்குனர் சிபி? சென்சேஷனல் இயக்குனருடன் புதிய கூட்டணி
ரஜினிகாந்த்
சூப்பர்ஸ்டார் ரஜினியின் கைவசம் தற்போது ஜெயிலர், லால் சலாம் ஆகிய படங்கள் உள்ளன.
இதை தவிர்த்து சிபி சக்ரவத்தி இயக்கும் புதிய படத்திலும் ரஜினி நடிக்கிறார் என தகவல் வெளியானது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் முழு கதையை தயார் செய்து ரஜினியிடம் இயக்குனர் சிபி அண்மையில் கூறியுள்ளார்.
ஆனால், ரஜினி எதிர்பார்த்த அளவிற்கு கதை இல்லாத காரணத்தினால் இப்படத்திலிருந்து சிபி வெளியேற வாய்ப்புகள் அதிகம் என கூறப்பட்டது.
புதிய கூட்டணி
இந்நிலையில், ரஜினிக்காக பிரபல சென்சேஷன் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் புதிய கதைக்களம் தயார் செய்து வைத்துள்ளதாகவும், சிபி சக்ரவத்திக்கு பதிலாக இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்குவதற்கு பெரிதும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

எதுவாக இருப்பினும் படக்குழுவின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பிற்காக பொறுத்திருந்து பார்ப்போம்.