ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் பிரதீப் ரங்கநாதனின் இரு திரைப்படங்கள்.. அட இது வேற லெவல்
பிரதீப் ரங்கநாதன்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார் பிரதீப் ரங்கநாதன். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான டிராகன் படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.
அடுத்ததாக LIK, Dude, ஆகிய படங்கள் வெளிவரவிருக்கும் நிலையில், இந்த இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகப்போகிறது.
ஒரே நாளில் ரிலீஸ்
ஆம், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் LIK படம் வருகிற அக்டோபர் 17ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. இதுகுறித்து ஏற்கனவே அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டு இருந்தனர்.
இந்த நிலையில், தற்போது அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் நடித்திருக்கும் Dude திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதன்மூலம், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள LIK மற்றும் Dude ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறது.