நடிகை சினேகாவிற்கு பல வருடங்களாக இருக்கும் பிரச்சனை.. ஓபனாக கூறிய பிரசன்னா
சினேகா
தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்த ஜோடிகளில் சினேகா-பிரசன்னா ஜோடியும் ஒன்று.
கடந்த 2012ம் ஆண்டு மே மாதம் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்தனர், இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
என்னவளே என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இப்படத்தை தொடர்ந்து ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன், ஏப்ரல் மாதத்தில், வசீகரா என நிறைய ஹிட் படங்கள் கொடுத்தார்.
பிரசன்னாவை திருமணம் செய்து குடும்பத்தை கவனித்து வந்தவர் கடந்த 2020ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வந்த பட்டாஸ் படத்தில் நடித்தார். விஜய்யின் கோட் படத்தில் நடித்தவர், கடைசியாக டிராகன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.
பழைய பேட்டி
தற்போது சமூக வலைதளங்களில் பிரசன்னா-சினேகா கொடுத்த பழைய பேட்டி வலம் வருகிறது. அதில் சினேகா தனக்கு ஓசிடி பிரச்சனை இருப்பதாக கூறி உள்ளார்.
அவரது பேச்சுக்கு உடனே பிரசன்னா, ஆமாம் வீட்டையே 3 முறை மாற்றி இருக்காங்க, அதேபோல் அவங்க மாத்தாம இருக்கும் ஒரே விஷயம் என்றால் அது நான் தான் என கிண்டலாக பேசியுள்ளார்.
எல்லாம் கிளீனாக இருக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பேன். இந்த ஓசிடி பிரச்சனை அரிதான பிரச்சனையாக இருந்தாலும் இதனால் பெரியதாக அச்சப்பட தேவையில்லை என கூறியுள்ளார்.

தந்தை மீது கொடூர தாக்குதல்.. பெற்ற பிள்ளைகளின் வெறிச்செயல் - போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்! IBC Tamilnadu

விண்ணில் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்.. அடுத்தடுத்து ஏற்படும் தடங்கல் - காரணம் என்ன? IBC Tamilnadu

பூமிக்குத் திரும்பும் சுனிதாவுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம்? அறிவியலாளர்கள் கூறும் தகவல் News Lankasri
