விஜய் குறித்து மனம் திறந்து பேசிய பிரஷாந்த்.. தளபதி 68ல் இணைந்த கூட்டணி
தளபதி 68
தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக அவருடைய 68வது திரைப்படம் உருவாகவுள்ளது. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகும் இப்படத்தின் பூஜை வீடியோ சில தினங்களுக்கு முன் வெளிவந்தது. மேலும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரபு தேவா, ஜெயராம், மோகன், பிரஷாந்த், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள்.
பிரஷாந்த் பேட்டி
இந்நிலையில், இப்படத்தில் மிகமுக்கியமான ரோலில் நடிக்கும் நடிகர் பிரஷாந்த் பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் குறித்து பேசியுள்ளார்.
இதில் 'நிறைய இடங்களில் நானும் விஜய்யும் சந்தித்து இருக்கிறோம். நிறைய தெரியாத விஷயங்கள் குறித்து பேசுவோம். சினிமா மட்டுமின்றி பெர்சனலாகவும் அவரும் நானும் இணைந்து பல விஷயங்கள் செய்து இருக்கிறோம். நாங்கள் அனைவரும் ஒரே இண்டஸ்ட்ரி, ஒரே குடும்பம். எனக்காக அவர் வந்து நிற்பார், அவருக்குக்காக நான் இருப்பேன்' என கூறியுள்ளார்.
நடிகர் பிரஷாந்தின் இந்த பழைய பேட்டி தளபதி 68 அறிவிப்புக்கு பின் மீண்டும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.