அஜித் இடத்தை பிடிக்க தவறிய டாப் ஸ்டார் பிரஷாந்த்.. காரணம் இதுதானா
அஜித்துடைய காலகட்டத்தில் அவருக்கு நிகரான மார்க்கெட்டை கொண்டுயிருந்தவர் டாப் ஸ்டார் பிரஷாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த வின்னர், ஜீன்ஸ் உள்ளிட்ட பல படங்கள் சூப்பர்ஹிட் ஆகியுள்ளது.
அஜித் படங்களில் பிரஷாந்த்
இந்நிலையில், அஜித் நடிப்பில் கடந்த 2000ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தீனா. இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார். இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு பிரஷாந்துக்கு தான், முருகதாஸ் கூறியுள்ளாராம். அந்த கதையும் பிரஷாந்துக்கு மிகவும் பிடித்துப்போக, தீனா படத்தில் நடிக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
ஆனால், எதிர்பாராத விதமாக, அப்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்ததால், தீனா படத்தில் அவரால் நடிக்கமுடியாமல் போனதாம். அஜித்தை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றிய தீனா படத்தில் மட்டும், பிரஷாந்த் நடித்திருந்தால், அவருக்கும் மிகவும் வெற்றியை அப்படம் தேடி கொடுத்திருக்கும்.
இதை போல், அஜித் நடிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். இப்படத்தில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது பிரஷாந்த் தானாம். இப் படத்திற்கு முன் ஷங்கர் இயக்கத்தில் 1998ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஜீன்ஸ். இப்படத்தில் பிரசாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர்.
ராஜீவ் மேனன் கூறிய கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தின் கதையில், பிரஷாந்துக்கு ஜோடியாக தபுவும், மம்முட்டிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய்யும் நடிப்பார்கள் என்று கூறியுள்ளார். ஜீன்ஸ் படத்தில் பிரசாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஜோடியை ரசிகர்கள் கொண்டாடியதால், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திலும், பிரஷாந்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய்யை போடுங்கள் என்று பிரஷாந்தின் தந்தை கூறியுள்ளார்.
அஜித் இடத்தை பிடிக்க தவறிய பிரஷாந்த்
ஆனால், அதற்கு ராஜீவ் மேனன் இதற்கு சம்மதிக்காததால் பிரசாந்த் படத்திலிருந்து விலகியுள்ளார். இதன்முலம், இப்படத்தில் அவருக்கு பதில் அஜித் கமிட்டாகி, படமும் மாபெரும் வெற்றியடைந்து, அஜித்துக்கு முன்னணி நடிகர்களில் ஒருவரேனும் அந்தஸ்தை தேடி தந்தது.
கமல்ஹாசன் மிக மோசமான ஆள், தரக்குறைவாக பேசிய தாடி பாலாஜி மனைவி நித்யா! வீடியோ உள்ளே

சிறுமிக்கு ஏற்பட்ட துயரம்... முதல் முறையாக கொடூரமான புதிய தண்டனைக்கு ஒப்புக்கொண்ட நாடு News Lankasri

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கவுள்ள Rare Earth Magnets - சீனாவிற்கு எதிரான இந்தியாவின் தற்சார்பு முயற்சி News Lankasri

ரயில் விபத்தில் 3 மாணவர்கள் பலி; உண்மை காரணம் என்ன? கேட் கீப்பர் அதிர்ச்சி வாக்குமூலம் IBC Tamilnadu
