பிரஷாந்த் நீல் - ஜூனியர் என்.டி.ஆர் இணைந்துள்ள படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா?
பிரஷாந்த் நீல்
கடந்த 2018ம் ஆண்டு வெளியான கே.ஜி.எப் படத்தின் மூலமாக இந்திய அளவில் பிரபலமானவர் தான் பிரஷாந்த் நீல். தற்போது இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நடிகர் அஜித், பிரஷாந்த் நீல் உடன் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், விரைவில் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற இருப்பதாவும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளிவந்தது.
இத்தனை கோடியா?
தற்போது பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளிவந்தது.
தெலுங்கு, தமிழ், இந்தி உட்பட 5 மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படம் ரூ.350 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri
