ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் புஷ்பா - 2 .. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா

Bhavya
in திரைப்படம்Report this article
புஷ்பா - 2
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் ஆகியோர் நடித்து 2021 - ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புஷ்பா.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் இந்த படமும் ஒன்று. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வந்தது.
பகத் பாசில் இந்த படத்தில் வில்லனாகவும், நடிகை சமந்தா ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியும் உள்ளார். இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று சமந்தா நடனமாடிய ஊ சொல்றியா மாமா பாடலும் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் பாகத்தில் எப்படி ஊ சொல்றியா மாமா பாடல் இருந்ததோ, அதே போல் இரண்டாம் பாகத்திலும் ஒரு பாடல் இருக்கிறது. அந்த பாடலுக்கு ஸ்ரீலீலா நடனமாடப்போகிறார் என தகவல் வெளிவந்துள்ளது.
ப்ரீ புக்கிங்
வருகிற டிசம்பர் 5 - ம் தேதி பிரமாண்டமாக உலகளவில் வெளிவரவிருக்கும் புஷ்பா 2 படத்தின் ப்ரீ புக்கிங் USA-வில் துவங்கியுள்ளது. இதுவரை ரூ. 2.1 கோடி புஷ்பா - 2 திரைப்படம் ப்ரீ புக்கிங்கில் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம் புஷ்பா 2 படத்திற்கு வெளிநாட்டில் எவ்வளவு பெரிய வரவேற்பு இருக்கிறது என்று தெளிவாக தெரிகிறது.