அதையே தொழிலா செய்துவிட்டு போகலாமே?..படுக்கைக்கு அழைத்த இயக்குனர் பற்றி பேசிய இனியா சீரியல் நடிகை
ப்ரீத்தா ரெட்டி
சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சின்னத்திரை தொடர்களில் ஒன்று தான் இனியா சீரியல். அதில் முக்கியமான ரோலில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ப்ரீத்தா ரெட்டி.
அட்ஜஸ்ட்மென்ட்
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ப்ரீத்தா ரெட்டி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், நான் ஆடிசன் சென்று தேர்வான பிறகு கையெழுத்துப் போடும் போது, சில நிபந்தனைகள் வைப்பார்கள்.
அந்த நிபந்தனைகளால் பட வாய்ப்பே வேண்டாம் என்று சொல்லி வந்துவிடுவோம். எனக்கு அப்படி எல்லாம் நடித்திருக்கிறது. மேலும் சில இயக்குனர்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்வார்கள்.
அப்போ இதை தான் செய்ய வேண்டும் என்றால், எதற்கு சினிமாவுக்கு வர வேண்டும்? அதற்கு அதையே தொழிலா செய்துவிட்டு போகலாமே? இது போன்ற பிரச்சனைகளால் சினிமாவைவிட்டு வந்துவிட்டேன்.
சின்னத்திரையில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் இல்லை என்று சொல்ல மாட்டேன்.இங்கும் இருக்கிறது ஆனால் இதுவரை நான் சந்தித்தது இல்லை என்று ப்ரீத்தா ரெட்டி கூறியுள்ளார்.
விரைவில் நித்யா மேனனுக்கு திருமணம்!… மாப்பிள்ளை இவர் தானா?