மருத்துவமனையில் இருக்கும் விஜயகாந்தின் தற்போதைய நிலைமை என்ன.. பிரேமலதா வெளியிட்ட வீடியோ
மருத்துவமனையில் விஜயகாந்த்
கடந்த 18ஆம் தேதி உடல்நல குறைவு காரணமாக பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்த். இருமல், சலி காரணமாக அனுமதிக்கப்பட்டார் என முதலில் கூறப்பட்டது.
பின் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் திரு. விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.
ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது.
அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என குறிப்பிட்டு இருந்தனர். அவர் விரைவில் குணமடைந்து நலமுடன் வீடு திரும்புவார் என ரசிகர்கள் வேண்டி வருகிறார்கள்.
பிரேமலதா வெளியிட்ட வீடியோ
இந்நிலையில், தற்போது விஜயகாந்தின் மனைவி பிரேமலதா 'கேப்டன் நலமாக இருக்கிறார். விரைவில் முழு உடல் நலத்துடன் வீடு திரும்பி, நம் அனைவரையும் சந்திப்பார்' என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ..
கேப்டன் நலமாக இருக்கிறார். விரைவில் முழு உடல் நலத்துடன் வீடு திரும்பி, நம் அனைவரையும் சந்திப்பார்.
— Vijayakant (@iVijayakant) November 29, 2023
- திருமதி. பிரேமலதா விஜயகாந்த் pic.twitter.com/P9iHyO7hzG