ப்ரேமம் பட இயக்குனர் அழைத்த தளபதி விஜய் ! என்ன காரணம் தெரியுமா?
சென்சேஷனல் ஹிட்டான ப்ரேமம்
தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் Bilingual திரைப்படமாக வெளியான நேரம், இப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார் அல்போன்ஸ் புத்திரன்.
இப்படத்தை தொடர்ந்து அவர் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் திரைப்படம் பெரியளவில் வெற்றியடைந்தது, குறிப்பாக தமிழ் மக்களிடையே பேராதரவை பெற்ற ப்ரேமம் இங்கு மட்டும் 200 நாட்களுக்கு ஓடியது.
மேலும் தற்போது அல்போன்ஸ் புத்திரன் கோல்ட் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். அப்படத்தில் ப்ரிதிவ்ராஜ், நயன்தாரா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் அழைப்பு
இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்தில் இருந்து ஜாலியோ ஜிம்கானா பாடலை ஷேர் செய்துள்ள அல்போன்ஸ் புத்திரனிடம் ரசிகர் ஒருவர் விஜய் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள அல்போன்ஸ் புத்திரன் "ப்ரேமம் வெளியான பிறகு முதலில் தமிழ்நாட்டில் இருந்து போனில் அழைத்த நபரே தளபதி விஜய் தான்.
நான் விஜய் சாரை ஒரு முறை சந்தித்துளேன். ஒரு நாள் அவர் என்னை படம் பண்ண கூப்பிடுவார் என்று நம்புகிறேன். நான் காத்திருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

உன் ரசிகர்கள் தான் காரணம்: அனிதா சம்பத் எலிமினேஷனுக்கு பின் ஆவேசம்