பிரேம்ஜி கிட்ட பிடித்த விஷயமே அதுதான்.. மாமியார் பேட்டி!!
பிரேம்ஜி
நடிகரும், இசையமைப்பாளரும், பாடகருமான பிரேம்ஜி சில மாதங்களுக்கு முன்பு, இந்து என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பேட்டி
இந்நிலையில் தற்போது பிரேம்ஜி -யின் மாமியார் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், ஆரம்பத்தில் பிரேம்ஜியின் பேட்டியை பார்த்துவிட்டு பொண்ணே கொடுக்கமாட்டேன்னு சொன்னேன். ஆனால் அதற்கு பின் அவரை பார்த்தால் இப்படியொரு தங்கமான புள்ளையாஇருக்கிறார்.
பிரேம்ஜி கிட்ட பிடித்த விஷயமே பெரியவங்களை ரொம்ப மதிப்பா நடத்துவார். நான் வீட்டுக்கு வந்ததும் நான் எதாவது வேலை செய்தால், என்னுடைய மகள், அதை செய்மா இதை செய்மான்னு என்று சொன்னாலும் பிரேம்ஜி தம்பி, "அதையெல்லாம் அவங்களை எதுக்கு செய்ய சொல்லுற என்று கோபப்படுவார். அந்த அளவுக்கு தங்கமானவர். எனக்கு அவர் இன்னொரு மகன் என்று மாமியார் ஷர்மிளா கூறியுள்ளார்.

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
