பிரேம்ஜி யாருக்கு ப்ரோபோஸ் செய்திருக்கிறார் பாருங்க! காதலர் தின வீடியோ
பிரேம்ஜி
பிரபல நடிகர் பிரேம்ஜி எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். அவருக்கு 43 வயதாகும் நிலையில் தற்போது வரை திருமணம் செய்துகொள்ளாமல் தான் இருக்கிறார். அவர் பாடகி வினைதா என்பவருடன் காதலில் இருக்கிறார் என தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்ட நிலையில் அதை அவர் மறுத்தார்.
இந்நிலையில் தற்போது காதலர் தினத்தில் பிரேம்ஜி ட்விட்டரில் போட்டிருக்கும் பதிவு வைரல் ஆகி இருக்கிறது.
உன்னை விடமாட்டேன்..
காதலர் தினத்தில் ப்ரொபோஸ் செய்வது போன்ற ஒரு வீடியோவை பிரேம்ஜி வெளியிட்டு இருக்கிறார். 'உன்னை விடவே மாட்டேன்' என அவர் மது பாட்டிலை பார்த்து தான் ப்ரொபோஸ் செய்திருக்கிறார்.
Happy Valentine’s Day ? pic.twitter.com/kUykdoghJ1
— PREMGI (@Premgiamaren) February 14, 2023
மேலும் மற்றொரு பதிவில் பிரேம்ஜி 'பிப்ரவரி மாதத்தில் 29, 30, 31 நீக்கியவர்கள், 14ம் தேதியையும் நீக்கிவிட வேண்டும்' என காட்டமாக கூறி இருக்கிறார்.
Who ever removed 29th 30th and 31st from February please remove 14th too
— PREMGI (@Premgiamaren) February 14, 2023