பிரேம்ஜி திருமணத்தில் நடந்த பிரச்சனை.. வெங்கட் பிரபு செய்த அதிர்ச்சி செயல்
பிரேம்ஜி
இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் பிரேம்ஜி. இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2007 - ஆம் ஆண்டு வெளி வந்த சென்னை 600028 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து "என்ன கொடுமை சார் இது" என்ற வசனம் மூலம் பிரபலமானவர்.
கடைசியாக இவர் விஜய் நடிப்பில் வெளியான GOAT படத்தில் நடித்துள்ளார். ஆனால், இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
பேச்சுலராக இருந்து வந்த பிரேம்ஜி ஈரோட்டை சேர்ந்த வங்கி ஊழியர் இந்துவை திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 9ந் தேதி திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணத்தில் ஜெய்,வைபவ், மிர்ச்சி சிவா, சங்கீதா,க்ரிஷ் போன்ற பிரேம்ஜியின் பல திரைத்துறை நண்பர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
வெங்கட் பிரபு செயல்
இந்நிலையில், பிரேம்ஜி மனைவி இந்து வெங்கட் பிரபு குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில், " எங்கள் திருமணம் நடக்க முக்கிய காரணமாக இருந்தது வெங்கட் பிரபு அண்ணா தான்.
எனக்கு அப்பா இல்லாத ஸ்தானத்தையும் பிரேமுக்கு அம்மா இல்லாத ஸ்தானத்தையும் பூர்த்தி செய்து எங்கள் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்தார். உறவினர்கள் கூட கெஸ்ட் போன்றுதான் வந்து சென்றார்கள்.
ஆனால், வெங்கட் அண்ணா தனி ஆளாக நின்று அனைத்தையும் கவனித்து கொண்டார். எங்கள் இருவர் மீதும் அப்படி ஒரு பாசத்தை வைத்துள்ளார்" என்று கூறியுள்ளார்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
