Primetime: திரை விமர்சனம்
ராபர்ட் பேட்டின்சன் நடிப்பில் ஆவணப்பட இயக்குநரான லான்ஸ் ஒபென்ஹெய்ம் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'Primetime' திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

கதைக்களம்
2006ஆம் ஆண்டில் NBC என்ற டிவி சேனலில் வேலை பார்க்கும் கிறிஸ் ஹேன்ஸன் (ராபர்ட் பேட்டின்ஸன்), குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு எதிரான தற்காப்புக் குழுவுடன் பணியாற்றுகிறார். அந்தக் குழு, பாலியல் வன்கொடுமை செய்ய நினைப்பவர்களை இணையம் வழியாக தொடர்புகொண்டு வீட்டிற்கு வரவழைக்கிறது.
அங்கு போலி நடிகர் ஒருவர் வரும் நபரிடம் பேச்சு கொடுக்க, திடீரென மறைந்திருக்கும் ஹேன்ஸன் மற்றும் அவரது ஒளிப்பதிவுக் குழுவினர் உள்ளே வந்து படம்பிடிக்கின்றனர். என்ன நடக்கிறது என்று புரியாமல் முழிக்கும் நபரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்கின்றனர். இவ்வாறாக இது நிகழ்ச்சியாக அந்த சேனலில் ஒளிபரப்பப்படுகிறது.

இந்த சூழலில் வளரும் நடிகரான டேன் ப்ளம் போலி நடிகராக இந்த நிகழ்ச்சியில் கொண்டுவரப்படுகிறார். பதின்ம வயது சிறுவனாக நடிக்க வேண்டியிருப்பதால் குழப்பமும், கலக்கமும் அடைகிறார். எனினும், ஹேன்ஸன் அவரிடம் சமூக குற்றவாளிகளைப் பிடிக்க நாம் இந்த வேலையை செய்கிறோம் என்றுக் கூறி புரிய வைக்கிறார். என்றாலும் ஒரு கட்டத்தில் இந்த நிகழ்ச்சி தன் தொழில் வாழ்க்கையை முன்னேற்றாது என்று டேன் கவலைப்படுகிறார்.
இதற்கிடையில், ஒரு முக்கிய பிரமுகரை பிடிக்க ஹேன்ஸன் முனைப்புடன் உள்ளார். அதே சமயம் அவருக்கு குடும்ப வாழ்க்கையில் ஒரு சிக்கலும் உள்ளது. ஹேன்ஸன் தனது குடும்ப வாழ்க்கையில் செய்த தவறினால் கவலைப்படும் சூழலில், எப்படி முக்கிய குற்றவாளியை பிடித்தார் என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்
தி டாக்மேட்டிக், குயிக்சென்ட் உள்ளிட்ட குறும்படங்கள், சம் கைன்ட் ஆப் ஹேவன், யு கேன் சி எவ்ரிதிங் ஆகிய ஆவணப்படங்களையும் இயக்கிய லான்ஸ் ஒபென்ஹெய்ம், பிரைம்டைம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.
குழந்தைகளை வன்கொடுமை செய்ய நினைக்கும் நபர்களை சிக்க வைக்கும் நிகழ்ச்சி என்ற கதைக்களத்தை மிகச்சிறப்பாக கையாண்டுள்ளார். அமெரிக்கா மட்டுமின்றி இந்தியாவில் கூட இதே போன்ற சம்பவங்கள் 90கள் காலகட்டத்தில் நடந்துள்ளது என்று சுட்டிக்காட்டியதும் சிறப்பு.
நல்லவர் முகமூடியை அணிந்துகொண்டு பொதுவெளியில் நடமாடும் கொடூரர்களை காட்டுவது போன்ற காட்சிகளையும் நேர்த்தியாக கட்டியுள்ளார் இயக்குநர். அவரது இயக்கத்திற்கு உறுதுணையாக இருப்பது போல் ராபர்ட் பேட்டின்ஸன் உள்ளிட்ட நடிகர்களின் பங்களிப்பும் அமைந்துள்ளன.

கலிபோர்னியாவில் ஒரு நபரை கையும் களவுமாக பிடிக்கும்போது, ராபர்ட் பேட்டின்ஸன் பேசும் தோணியிலேயே அவரை மிரட்டுவதுடன் நடிப்பிலும் மிரட்டியிருக்கிறார். அதே சமயம் முதியவர் ஒருவரை பிடிக்கும்போது அவர் எதிர்ப்பு தெரிவிப்பதை கையாள முடியாமல் தவிக்கும் இடத்தில் யதார்த்த நடிப்பை ராபர்ட் பேட்டின்ஸன் வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஸ்கைய்லர் கிசொண்டோ டீன் ஏஜ் கதாபாத்திரமாக மாற, அப்படியே பொருந்தி போயிருக்கிறார். முதல் முறையாக அவர் நடிக்க முயற்சிக்க, அப்போது சந்திக்கும் அதிர்ச்சி விஷயம் ஒன்றால் மனரீதியாக பாதிக்கட்டத்தை, மிக அழகாக வெளிப்படுத்துகிறார். இவர்களுக்கு அடுத்து நடிப்பில் ஸ்கோர் செய்தது மெர்ரிட் வெவேர், போப்பே பிரிட்ஜர்ஸ் மற்றும் மேத்யூ மஹெர் மூவரும்தான்.
ஒவ்வொரு நபரையும் பிடிக்கும் நிகழ்ச்சியை திரும்ப திரும்ப காட்டியது ஒரு சிறிய சலிப்பை ஏற்படுத்தினாலும், மோசமான நபர்களை அடையாள காட்ட வேண்டும் என்ற எண்ணத்தால், அடுத்து என்ன என்றே பார்க்க வைக்கும் திரைக்கதையை அமைத்துள்ளார் அஜோன் சிங்.

டேனியல் கார்பரின் படத்தொகுப்பு, டேவிட் போலெனின் ஒளிப்பதிவு மற்றும் ஆரி பலூஸியனின் இசை ஆகிய அனைத்தும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன.
க்ளாப்ஸ்
ராபர்ட் பேட்டின்ஸன், ஸ்கைய்லர் கிசொண்டோ
திரைக்கதை
டெக்னிக்கல் விஷயங்கள்
பல்ப்ஸ்
பெரிதாக ஒன்றுமில்லை
மொத்தத்தில் இந்த ப்ரைம்டைம் கண்டிப்பாக வயது வந்தோர் பார்க்க வேண்டிய ஷோ.

காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri