ப்ரின்ஸ் திரைப்படம் வெளியாகும் முன்பே 100 கோடி அளவில் வியாபாரம்! விஜய், அஜித் நெருங்கும் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறியிருப்பவர் சிவகார்த்திகேயன், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.
அந்த வகையில் கடைசியாக அவரின் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் உலகளவில் ரூ. 100 கோடியளவில் வசூல் செய்தது.
அப்படத்தை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான ப்ரின்ஸ் திரைப்படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படம் வரும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
ப்ரின்ஸ் திரைப்படம்
இந்நிலையில் தற்போது ப்ரின்ஸ் திரைப்படத்தின் வியாபாரம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. ஆம், ப்ரின்ஸ் திரைப்படம் தற்போது வரை ரூ. 90+ கோடி அளவில் வியாபாரம் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மேலும் தெலுங்கு திரையரங்க உரிமையும் நன்றாக வியாபாரம் ஆகினால், சிவகார்த்திகேயன் முதல் 100 கோடி வியாபாரமான திரைப்படம் ப்ரின்ஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கணவர் அடித்த அடி கரு கலைய மருத்துவமனையில் சீரியல் நடிகை-