ப்ரின்ஸ் திரைவிமர்சனம்

By Kathick Oct 21, 2022 04:34 AM GMT
Report

சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கத்தில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் ப்ரின்ஸ். டாக்டர், டான் ஆகிய இரு சூப்பர்ஹிட் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ப்ரின்ஸ் படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. அதுமட்டுமின்றி ஏற்கனவே தெலுங்கில் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் அனுதீப் மீதும், சத்யராஜ் - சிவகார்த்திகேயன் காம்போ மீதும் ரசிகர்கள் அளவுகடந்த எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். இத்தைகைய எதிர்பார்ப்பை ப்ரின்ஸ் முழுமையாக பூர்த்தி செய்தாரா? இல்லையா? வாங்க விமர்சனத்தில் பார்க்கலாம்..

கதைக்களம்

ஜாதி, மாதம் என அடித்துகொள்ளும் மக்கள் மத்தியில் அதையெல்லாம் வெறுத்து மனிதம் தான் முக்கியம் என்று வாழ்ந்து வருகிறார் சத்யராஜ் { உலகநாதன் }. ஊருக்கே உதாரணமாக விளங்கும் சத்யராஜின் மகனாக மாஸ் என்ட்ரி கொடுக்கிறார் கதாநாயகன் சிவகார்த்திகேயன் { அன்பு }. பாண்டிச்சேரியில் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் சிவகார்த்திகேயன், அங்குள்ள பள்ளியில் Social Science வாத்தியாராக பணிபுரிந்து வருகிறார்.

ப்ரின்ஸ் திரைவிமர்சனம் | Prince Movie Review

அதே பள்ளிக்கு ஆங்கில ஆசிரியையாக பணிபுரிய வருகிறார் கதாநாயகி மரியா { ஜெசிகா }. ஜெசிகாவை பார்த்தவுடன் காதலில் விழும் சிவகார்த்திகேயன், அவருடன் பேசி பழக துவங்குகிறார். ஒரு கட்டத்தில் ஜெசிகாவிடம் தனது காதலை சிவகார்த்திகேயன் கூற, முதலில் அதை ஏற்க மறுக்கிறார் ஜெசிகா.

இதன்பின், அடுத்துதடுத்து ஒவ்வொரு விஷயத்திலும் ஜெசிகாவை இம்ப்ரஸ் செய்யும் சிவகார்த்திகேயன் மீதி, ஜெசிகாவிற்கு காதல் மலர்கிறது. சிவகார்த்திகேயனிடம் தனது காதலை வெளிப்படுத்தும் ஜெசிகாவை தனது தந்தை சத்யராஜிடம் அழைத்து சென்று, இவள் தான் நான் காதலிக்கும் பெண் என்று சிவகார்த்திகேயன் கூற, முதலில் ஆனந்தத்தில் துள்ளி குதிக்கிறார் சத்யராஜ். பின்பு தன் மகன் காதலிக்கும் பெண் ஒரு பிரிட்டிஷ் என்று தெரிந்துகொள்ளும் சத்யராஜ், இந்த காதலுக்கு மறுப்பு தெரிவிக்கிறார்.

ப்ரின்ஸ் திரைவிமர்சனம் | Prince Movie Review

சத்யராஜின் தாத்தாவை சுதந்திர போராட்டத்தில் பிரிட்டிஷ்காரர்கள் கொன்றதால், பிரிட்டிஷ் மீது தனக்கு தீராத கோபம் இருக்கிறது என்றும், இதனால் ஜெசிகாவை தனது மருமகளாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று சத்யராஜ் கூறுகிறார். மறுபுறம் ஜெசிகாவின் தந்தையும் இந்த காதலுக்கு மறுப்பு தெரிவிக்கிறார். இந்த அணைத்து பிரச்சனைகளையும் சமாளித்து தனது காதலி ஜெசிகாவை சிவகார்த்திகேயன் கரம்பிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.. 

படத்தை பற்றிய அலசல்

வழக்கம் போல் நடிப்பில் பட்டையை கிளப்பிவிட்டார் சிவகார்த்திகேயன். நகைச்சுவை, காதல், ரொமான்ஸ், டைமிங் என பக்காவாக நடித்துள்ளார். குறிப்பாக நடனத்தில் பின்னியெடுக்கிறார். நடிகை மரியா தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் உள்ளதை திருடிவிட்டார். அழகாக வந்து அளவான நடிப்பை காட்டியுள்ளார்.

ப்ரின்ஸ் திரைவிமர்சனம் | Prince Movie Review

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதே கதாபாத்திரமாக திரையில் வாழ்பவர் நடிகர் சத்யராஜ். தனக்கு கிடைத்து ஒவ்வொரு காட்சியிலும் பிரமாதமாக ஸ்கோர் செய்து அசத்திவிட்டார். முதல்முறையாக வித்தியாசமாக திரையில் தெரிந்த பிரேம்ஜியின் நடிப்பு ரசிக்கக்கூடியதாக இருந்தது. அவருடைய இந்த முயற்சிக்கு தனி பாராட்டு.

சிவகார்த்திகேயனின் நண்பர்களாக நடித்துள்ள சதீஸ், பிராங்க்ஸ்டர் ராகுல், பாரத் என மூவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர். நடிகர்கள் சூரி மற்றும் ஆனந்த்ராஜ் சில நிமிடங்கள் வந்தாலும் திரையரங்கை அதிரவைத்துவிட்டார்கள்.

ப்ரின்ஸ் திரைவிமர்சனம் | Prince Movie Review

முதல் தமிழ் படமாக இருந்தாலும் அருமையாக கையாண்டுள்ளார் இயக்குனர் அனுதீப். இவர் எடுத்துக்கொண்ட கதைக்கு தனி அப்லாஸ். இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் போர் அந்த நாட்டின் மக்களை காயப்படுகிறது என்பதையும், அவர்களுடைய வாழ்வாதாரத்தையும், உறவுகளையும் எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பதையும் அழகாக காட்டியுள்ளார். குடும்ப ரசிகர்களுக்கு ஏற்ப்ப அமைக்கப்பட்டுள்ள திரைக்கதைக்கு தனி பாராட்டுக்கள்.

சில இடங்களில் நகைச்சுவை ஒர்க்கவுட் ஆகவில்லை என்றாலும் அது படத்தின் ஓட்டத்தை கெடுக்கவில்லை. இசையில் தெறிக்கவிடுகிறார் தமன். பின்னணி இசை, பாடல்கள் என திரையரங்கமே அதிருக்கிறது. மனோஜ் பரமாம்ஸாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். ப்ரவீன் கே. எல் எடிட்டிங் சூப்பர். நடன இயக்குனர்களுக்கு தனி பாராட்டு.  

பிளஸ் பாயிண்ட்

சிவகார்த்திகேயன் நடிப்பு, நடனம்

மரியா, சத்யராஜ், பிரேம்ஜி நடிப்பு

திரைக்கதை, இயக்கம்

டைமிங் நகைச்சுவைகள்

பாடல்கள், பின்னணி இசை

ஒளிப்பதிவு, எடிட்டிங்

மைனஸ் பாயிண்ட்

சில இடங்களில் ஒர்க்கவுட் ஆகாத நகைச்சுவை

மொத்தத்தில் இந்த தீபாவளி அனைத்து சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மாஸ் என்டர்டைன்மெண்ட் ப்ரின்ஸ் தீபாவளி தான்.  

ப்ரின்ஸ் திரைவிமர்சனம் | Prince Movie Review


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US