ஒருபாடலுக்கு ஆடிய ப்ரியமணி.. ஷாருக் கான் சொன்ன வார்த்தை! ஆச்சர்யப்பட்ட நடிகை
அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் தற்போது நடித்து வருகிறார் ஷாருக் கான். அந்த படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் நிலையில் நடிகை ப்ரியாமணியும் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார். ஷாருக் கான் உடன் ப்ரியாமணிக்கு இது இரண்டாவது படம். அவர் ஏற்கனவே சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடி இருந்தார்.
ப்ரியாமணி ஆச்சர்யம்
ஜவான் படத்தின் ஷூட்டிங்கில் ப்ரியாமணியை பார்த்துவிட்டு ஷாருக் கான் அவரை கட்டிப்பிடித்து கொண்டாராம், 'சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்கு பிறகு மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி' என கூறினாராம்.
தன்னை இன்னும் ஷாருக் கான் மறக்காமல் இருப்பது தனக்கே ஆச்சர்யம் அளித்ததாக ப்ரியாமணி அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார்.
மகாபாரதம் சகுனி மாமாவாக நடித்தவர் திடீர் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
