சூப்பர்ஸ்டார் மகளாக நடிக்க மறுத்த நடிகை! ரஜினி 169 வதந்திக்கு முற்றுப்புள்ளி
பீஸ்ட் படத்தின் ரிலீஸுக்கான பணிகளை தற்போது தீவிரமாக செய்து வருகிறார் நெல்சன் திலீப் குமார். விஜய் - பூஜா ஹெக்டே நடித்திருக்கும் இந்த படத்தின் இரண்டாவது பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது.
ரஜினி 169
பீஸ்ட் படத்திற்கு பிறகு நெல்சன் ரஜினி உடன் கூட்டணி சேர்கிறார். இந்த படத்திற்கும் அனிருத் தான் இசை. அதிகாரபூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக சில வாரங்கள் முன்பே தகவல் வந்தது. இருப்பினும் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

மகளாக பிரியங்கா அருள்மோகன்?
மேலும் ரஜினிகாந்தின் மகளாக ப்ரியங்கா அருள்மோகன் நடிக்கிறார் என தகவல் வெளியானது. நெல்சனின் முந்தைய படமான டாக்டர் படத்தில் அவர் தான் ஹீரோயினாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது பிரியங்கா மகளாக நடிக்கவில்லை என தகவல் வெளியாகி இருக்கிறது.

சிம்புவை அசிங்கப்படுத்திய அனிதா, பிக்பாஸ் அல்டிமேட்டில் பரபரப்பு, வீடியோ இதோ