மறைந்த நடிகையின் பயோபிக்கில் நடிக்க ஆசை.. நடிகை பிரியங்கா மோகன் ஓபன் டாக்
பிரியங்கா மோகன்
இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வருபவர் பிரியங்கா மோகன். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிஸியாக படங்கள் நடித்து வருகிறார். இவர் கன்னட திரையுலகம் மூலம் திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும், தெலுங்கில் வெளிவந்த கேங் லீடர் படம்தான் மாபெரும் வரவேற்பை பெற்று தந்தது.

இதை தொடர்ந்து தமிழில் என்ட்ரி கொடுத்தார். டாக்டர், எதற்கும் துணிந்தவன் டான், கேப்டன் மில்லர், பிரதர் ஆகிய படங்களில் நடித்தார். அடுத்ததாக கவினுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி Made in Korea என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் நேரடியாக ஓடிடி-யில் வெளிவரும் என கூறப்படுகிறது.

பயோபிக்
திரையுலகில் உள்ள அனைத்து நடிகர்கள், நடிகைகளுக்கும் கண்டிப்பாக ஒரே ஒரு பயோபிக் படத்திலாவது நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அப்படி ஒரு ஆசை நடிகை பிரியங்கா மோகனுக்கும் உண்டு. யாருடைய பயோபிக்கில் நடிக்க ஆசை என பிரியங்கா மோகனிடம் சமீபத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த அவர், மறைந்த நடிகை சௌந்தர்யாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை என கூறியுள்ளார்.

இந்திய சினிமாவில் மாபெரும் வெற்றி படங்களில் நடித்தவர் நடிகை சௌந்தர்யா. ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்தி, அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, நாகர்ஜுனா என பல உச்ச நட்சத்திரங்களுடன் அவர் நடித்திருக்கிறார். சினிமாவின் உச்சத்தில் இருந்த நடிகை சௌந்தர்யா தனது 31வது வயதில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri