பவர் ஸ்டாருக்கு ஜோடியாகும் பிரியங்கா மோகன்.. சூப்பர் ஜோடி என கூறும் ரசிகர்கள்
பிரியங்கா மோகன்
தமிழில் டாக்டர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் பிரியங்கா மோகன். முதல் படமே இவருக்கு வெற்றியை கொடுத்தது.
இதை தொடர்ந்து சூர்யாவுடன் ஜோடி சேர்ந்த பிரியங்கா மோகன், மீண்டும் சிவகார்திகேயன் இணைந்து டான் படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது தனுஷுடன் இணைந்து கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
பவர் ஸ்டாருக்கு ஜோடி
இந்நிலையில், தென்னிந்திய அளவில் சென்சேஷன் நடிகைகளில் ஒருவராக இருக்கும் பிரியங்கா மோகன் அடுத்ததாக முன்னணி நடிகர் பவர் ஸ்டார் பவன் கல்யாணுடன் இணைந்து நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தை சுஜித் என்பவர் இயக்குகிறார். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரத்தில் இருந்து ஆரம்பமாகிறது என தெரிவிக்கின்றனர்.
இப்படத்தின் மூலம் முதல் முறையாக பவர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார் பிரியங்கா. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும், பவன் கல்யாண் மற்றும் பிரியங்கா மோகன் சூப்பர் ஜோடி என கூறி வருகிறார்கள்.
அருண் பாண்டியனின் முழு குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.. அழகிய பேமிலி போட்டோ

11 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை - மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வீரர் மீது புகார் IBC Tamilnadu
