சீதா ராமன் தொடரில் இருந்து விலகிய நடிகை! அதிர்ச்சி முடிவுக்கு காரணம் இதுதான்
சீதா ராமன்
ஜீ தமிழில் சமீபத்தில் தொடங்கிய சீரியல் சீதா ராமன். ரோஜா சீரியல் புகழ் நடிகை பிரியங்கா நல்காரி தான் அதில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
தற்போது சுமார் 70 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பாகி இருக்கிறது. இந்த தொடருக்கு ரசிகர்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
விலகிய பிரியங்கா
ஹீரோயினாக நடித்து வந்த பிரியங்கா தற்போது தொடரில் இருந்து விலகுகிறாம். அவருக்கு சமீபத்தில் தான் மலேசியாவை சேர்ந்த காதலருடன் திருமணம் நடைபெற்றது.
கணவர் மலேசியாவில் இருப்பதால் அவர் அங்கிருந்து தான் ஷூட்டிங்கிற்கு வருகிறாராம். அது கடினமாக இருப்பதாலும், கணவர் கொடுத்த அழுத்தத்தாலும் தான் பிரியங்கா தற்போது தொடரில் இருந்து விலக முடிவெடுத்து இருக்கிறார் என கூறப்படுகிறது.
நிச்சயம் ஆன பெண்ணுடன் பிரேக்கப்? திருமணத்தை நிறுத்திவிட்டாரா எங்கேயும் எப்போதும் பட ஹீரோ