நிச்சயம் ஆன பெண்ணுடன் பிரேக்கப்? திருமணத்தை நிறுத்திவிட்டாரா எங்கேயும் எப்போதும் பட ஹீரோ
சர்வானந்த்
தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் பல படங்களில் நடித்து இருப்பவர் சர்வானந்த். அவர் எங்கேயும் எப்போதும், ஜேகே எனும்நண்பனின் வாழ்க்கை, கணம் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் நடித்து இருக்கிறார்.
கடந்த ஜனவரி 26ம் தேதி சர்வானந்துக்கு ரக்ஷிதா ரெட்டி என்ற பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
திருமணம் நின்றுவிட்டதா?
நிச்சயம் முடிந்து பல மாதங்கள் ஆகியும் திருமண தேதி உறுதி செய்யப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் திருமணம் நின்றுவிட்டது என செய்தி பரவ தொடங்கிவிட்டது.
அது உண்மை அல்ல என சர்வானந்துக்கு நெருக்கமான ஒருவர் விளக்கம் அளித்திருக்கிறார். தனது அடுத்த படத்தின் ஷூட்டிங்கிற்காக அவர் லண்டனில் ஒரு மாதத்திற்கும் மேல் இருந்துவிட்டு தற்போது தான் திரும்பி இருக்கிறார். இனிமேல் தான் குடும்பத்தினர் திருமண தேதியை உறுதி செய்வார்கள் என விளக்கம் கொடுத்திருக்கின்றனர்.
குழந்தையை முதல்முறை கையில் ஏந்திய நயன்தாரா! வைரலாகும் புகைப்படங்கள்