நடிகர் கமல் மற்றும் AK61 பட தயாரிப்பாளர் இடையே நடந்த திடீர் சந்திப்பு ! என்ன காரணம் தெரியுமா?
கமலை சந்தித்த AK61 தயாரிப்பாளர்
பாலிவுட் திரையுலகின் மிகவும் பிரபலமான தயாரிப்பாளரான போனி கபூர் சமீப காலமாக தென்னிந்திய திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறார்.
அதன்படி தமிழில் அவர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை, நெஞ்சுக்கு நீதி, வீட்ல விசேஷம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின.
இதற்கிடையே உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை தற்போது உலகநாயகன் கமல் பார்த்துள்ளார். மேலும் அவர் படக்குழுவை அழைத்து அவர்களை பாராட்டியிருக்கிறார்.
இது குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் அவரின் டிவிட்டர் பக்கத்தில் நெஞ்சுக்கு நீதி படத்தை பார்த்துவிட்டு கமல்ஹாசன் பாராட்டியதாக பதிவிட்டுள்ளார். மேலும் அவர் அங்கு எடுத்து கொண்ட புகைப்படத்தையும் தற்போது வெளியிட்டுள்ளார்.
After watching #NenjukkeNeedhi @ikamalhaasan shared his appreciation with @Udhaystalin @Arunrajakamraj @mynameisraahul pic.twitter.com/aUJxTNHxbv
— Boney Kapoor (@BoneyKapoor) July 8, 2022
அட்லீயின் ஜவான் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லையா? லேட்டஸ்ட் தகவல் இதோ