அஜித் முதலில் மனிதனாக வாழ வேண்டும், பல லட்சம் பணத்தை ஏமாற்றிவிட்டார்- தயாரிப்பாளர் விளாசல்
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகவுள்ள விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது, இதில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கவுள்ளார் என்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு பல காரணங்களால் தாமதம் ஆகி வந்த நிலையில் தற்போது ஜூலை மாதத்தில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் வந்துள்ளது.

இந்நிலையில், அஜித்தை பற்றி "வேட்டையாடு விளையாடு" தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் சர்ச்சை கருத்துக்களை முன்வைத்துள்ளார். அதில், "அஜித் மாபெரும் நடிகர், அவர் வாழ்க்கையிலும் நடித்து கொண்டு தான் இருக்கிறார்.
அஜித் முதலில் மனிதனாக வாழ வேண்டும். என்னிடம் பணத்தை வாங்கி ஏமாற்றி விட்டார். அதை அவர் ஒப்புக் கொள்ள வேண்டும். அப்போது என்னிடம் ஆதாரம் இல்லை என்ற காரணத்தால் என்னை ஏமாற்றிவிட்டார்.
ஆனால் இப்போது என்னிடம் ஆதாரம் உள்ளது. அஜித் ஒரு ஜென்டில்மென் என அவரே தனக்கு பெயர் வைத்துக்கொண்டு பத்திரிகை காரர்களுக்கு காசு கொடுத்து அவரை பற்றி எழுத செய்கிறார்.
மேலும், மரியாதையை காசு கொடுத்து வாங்குபவர் தான் அஜித்" என பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

புதிய கார் வாங்கியுள்ள பிக்பாஸ் புகழ் தனலட்சுமி- என்ன கார் பாருங்க, போட்டோ இதோ
இரசாயன ஆலைகள், துறைமுக நகரம் மீது உக்ரைன் தாக்குதல்: வெளிநாட்டுக் கொடி கப்பலில் தீயை மூடிய பாகங்கள் News Lankasri
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri