அஜித்துடன் விஜய் நடிக்க இதை செய்ய வேண்டும்- எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட கண்டிஷன், என்ன தெரியுமா?
அஜித்-விஜய்
அஜித்-விஜய் இருவரும் தமிழ் சினிமாவின் முக்கிய தூண்களாக இருப்பவர்கள்.
அஜித் துணிவு படத்தை தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். அஜர்பைஜானில் நடந்து வந்த படப்பிடிப்பு இப்போது அடுத்து எங்கு நடக்கிறது என்பது தெரியவில்லை.
படப்பிடிப்பு புகைப்படங்களுக்கு பதிலாக அஜித் பைக் டூர் சென்ற புகைப்படங்கள் தான் அதிகம் வெளியாகும்.
இன்னொரு பக்கம் விஜய் தனது 68வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ரஷ்யாவில் படத்தின் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் தேர்தலுக்காக இன்று காலை சென்னை வந்து ஓட் செய்துள்ளார்.
தெரியாத தகவல்
இவர்கள் இருவரும் இணைந்து இப்போது ஒரு படம் நடிக்க வேண்டும் என்றால் அது சாத்தியமே இல்லை.
அப்படி இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே பட தயாரிப்பாளர் சௌந்தர பாண்டியன் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர் பேசும்போது, ராஜாவின் பார்வையிலே படத்தில் நடிக்கும் போது அஜித்-விஜய் இருவருமே வளரும் நடிகர்களாக இருந்தார்கள்.
அஜித் எனக்கு நெருங்கிய நண்பர் சம்பளம் இல்லாமல் நடித்தார். விஜய்யை படத்தில் நடிக்க வைக்க அணுகியபோது, எஸ்.ஏ.சந்திரசேகர் இந்தப் படத்தில் விஜய் நடிக்க வேண்டுமென்றால் இளையராஜாவை இசையமைக்க வையுங்கள் என்றார்.
பிறகு இளையராஜாவை இசையமைக்க வைத்தோம், விஜய்யும் படத்தில் நடித்தார் என்றார்.

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
