பிரபல அஜித் பட தயாரிப்பாளர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகினர்
எஸ்.எஸ். சக்ரவத்தி
தமிழ் திரையுலகில் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ். சக்ரவத்தி.
இவர் அஜித்தை வைத்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார். முகவரி, வாலி, சிட்டிசன், வில்லன், வரலாறு என சொல்லி கொண்டே போகலாம்.
அந்த அளவிற்கு அஜித்துக்கு நெருக்கமான தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்தவர் தான் நிக் ஆர்ட்ஸ் சக்ரவத்தி.
ஆனால், திடீரென இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இருவரும் இணைந்து படம் பண்ணவில்லை.
மரணம்
இவர் கடந்த 8 மாதங்களாக புற்றுநோயால் அவதிபட்டு வந்தார். இந்நிலையில், தற்போது நோயால் அவதிபட்டு வந்த தயாரிப்பாளர் எஸ்.எஸ். சக்ரவத்தி மரணமடைந்துள்ளார்.
இவருடைய மரணம் திரையுலகில் உள்ள பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மண் மனம் மாறாத மண்வாசனை சுற்று.. சரிகமப 4 இந்த வார ஸ்பெஷல் அப்டேட்