ஜூனியர் NTR அளவுக்கு இல்லை.. நடிகை ருக்மிணி வசந்த் குறித்து மேடையில் பேசிய தயாரிப்பாளர்
ருக்மிணி வசந்த்
கன்னட திரையுலகில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக வலம் வருபவர் ருக்மிணி வசந்த். இவர் நடிப்பில் சமீபத்தில் தமிழில் மதராஸி படம் வெளிவந்தது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்திருந்தார்.
கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்று மதராஸி படம் வெற்றியடைந்துள்ளது. ருக்மிணி வசந்த் நடிப்பில் நாளை மறுநாள் காந்தாரா சாப்டர் 1 படம் வெளிவரவுள்ளது.
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக ருக்மிணி நடித்துள்ளார். இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள். காந்தாரா சாப்டர் 1 படத்தின் ப்ரோமோஷன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தயாரிப்பாளர் பேச்சு
தெலுங்கில் இப்படத்தின் ப்ரோமோஷன் நடந்தபோது, அதில் ஜூனியர் NTR சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது, பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் NTR, ருக்மிணி வசந்த் இணைந்து நடிக்கும் படம் குறித்து மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் ரவி ஷங்கர் பேசியுள்ளார்.
"NTR - பிரஷாந்த் நீல் படத்தில் ஜூனியர் NTR-க்கு பொருத்தமான ஹீரோயினை தேடியபோது, ருக்மிணி வசனத்தை கண்டுபிடித்தோம். அவர் நடிப்பில் ஜூனியர் NTR அளவுக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால், நாங்கள் அவரிடம் இருந்து குறைந்தது 80 சதவீதம் எதிர்பார்க்கிறோம்" என அவர் கூறியுள்ளார்.