மனுஷங்க பார்க்க மாட்டாங்க இந்த படத்தை.. அனிமல் படத்தை கடுமையாக விமர்சனம் செய்த நட்சத்திரம்
அனிமல்
சமீபத்தில் பாலிவுட் திரையுலகில் இருந்து வெளிவந்த திரைப்படம் அனிமல். Pan இந்தியா தரத்தில் உருவான இப்படத்தை தெலுங்கு இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார்.
மேலும் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சிலருக்கு இப்படம் நன்றாக இருக்கிறது என தோன்றினாலும் பலரும் இப்படத்தை கழுவி ஊத்தி வருகிறார்கள்.
கடுமையான விமர்சனம்
அந்த வரிசையில் தற்போது மார்க் ஆண்டனி படத்தின் மூலம் இந்த ஆண்டு ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ள தயாரிப்பாளர் வினோத் குமார் அனிமல் குறித்து தனது விமர்சனத்தை கூறியுள்ளார்.
இந்த பதிவில் 'மிருகங்கள் மட்டும் தான் அனிமல் படத்தை பார்க்க முடியும்' என குறிப்பிட்டுள்ளார். இவரை போல் பலரும் தங்களது கடுமையான விமர்சனங்களை அனிமல் படத்திற்கு தெரிவித்து வருகிறார்கள்.
Only Animals can watch #Animal
— Vinod Kumar (@vinod_offl) December 10, 2023

விஜயகாந்தின் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி; ரூ.150 கோடிக்கு விற்பனை - வாங்கியது யார்? IBC Tamilnadu

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
