பிக்பாஸ் புகழ் ஜுலியானாவுக்கு கிடைத்த கௌரவம்- பெருமையுடன் அவரே பதிவிட்ட புகைப்படம்
பிக்பாஸ் முதல் சீசன் தமிழ் சின்னத்திரையில் பெரிய எதிர்ப்புக்கு இடையில் நடந்தது. விஜய் தொலைக்காட்சி மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனுக்கும் நிறைய பிரச்சனைகள் எல்லாம் எழுந்தன.
ஆனால் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு வெற்றிகரமாக முடிந்தது. இதுவரை 5 சீசன் முடிவடைந்துவிட்டது, ஆனால் முதல சீசனை போல் பெரிய அளவில் ஹிட்டடித்த சீசன் எதுவும் இல்லை என்று தான் கூற வேண்டும்.
ஜுலியானாவுக்கு கிடைத்த கௌரவம்
பிக்பாஸ் முதல் சீசனில் சினிமா பற்றிய எந்த ஒரு தெளிவும் இல்லாமல் கலந்துகொண்டவர் ஜுலி. முதல் சீசனில் இருந்து வெளிவந்த ஜுலிக்கு மக்களிடம் இருந்து நிறைய எதிர்ப்பு வந்தது, அதில் இருந்து மீண்டு வர அவர் மிகவும் கஷ்டப்பட்டதாக கூறியிருந்தார்.
அண்மையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது பழைய இமேஜை அப்படியே சுக்கு நூறாக உடைத்து நல்ல பெயரை வாங்கினார். ஜுலி பிக்பாஸ் வருவதற்கு முன் செவிலியராக இருந்தவர்.
தற்போது செவிலியர்கள் தினம் அப்போலோ மருத்துவமனையில் அனுசரிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் ஜுலி கலந்துகொண்டு சிறப்புரையாற்றியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர் இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
குக் வித் கோமாளி 2 புகழ் கிரேஸிற்கு இத்தனை சொந்த ஹோட்டல்கள் உள்ளதா?- அவரே கூறிய விஷயம்