புலி படத்தால் மாபெரும் நஷ்டம்.. வேறு யாரவது இருந்திருந்தால் தற்கொலைதான்! PT செல்வகுமார் பேச்சு
புலி
விஜய்யின் முன்னாள் மேனேஜர் மற்றும் பிரபல தயாரிப்பாளருமான PT செல்வகுமார் சமீபத்தில் புலி படம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
"புலி படத்தின் ரிலீஸுக்கு ஒரு நாள் முன் Income Tax ரைட். அது ஒரு சூழ்ச்சி. கூட இருந்தவர்களே செய்த சதி. Income Tax ரைட் காரணமாக படம் ரிலீஸ் ஆகாது என செய்தி வந்துவிட்டது. அவர்களுக்கு படம் வெளிவந்தால் என்ன? என்னுடைய நாசமா போனால் என்ன? ஒரு PRO வாழ்க்கை, எனக்கென ஒரு குடும்பம் இருக்கிறது. முதல் முறையாக ஆசையோடு பாசத்தோடு ஒரு படம் வாங்கி எப்படியாவது மேல வந்திறலாம் என எவ்வளவு கனவுகளை நான் கண்டு இருப்பேன். என்னுடைய 27 வருட உழைப்பு ஒரே திரைப்படத்தில் சுக்குநூறாக்கப்பட்டது. எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. நான் என்ன பெரிய வீட்டு பிள்ளையா? இல்லை எங்கயாவது கொள்ளையடித்து வைத்திருக்க கூட்டமா?. உழைத்து முன்னேற வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன் வாழ்பவன்".
தற்கொலைதான்
"என்ன சார் படம் ரிலீஸ் ஆகாதுனு சொல்றாங்க, எவண்டா சொன்னான் என் படம் ரிலீஸ் ஆகாதுனு என நான் சொன்னவுடன் அனைவரும் ஆடிப்போய்விட்டனர். என்னுடைய சொத்துக்களை வித்தாவது படத்தை ரிலீஸ் செய்வேன் என்றேன். பல பிரச்சனைகளை கடந்து ரிலீஸ் செய்தேன். படம் அட்டர் பிளாப், ஆமை பேசுதான், தவள பேசுதான், ரசிகர்கள் எல்லாம் ஓடுறாங்க என இப்படியொரு தகவல் வருகிறது. கண்ணீரும் கவலையுமாக இருக்கிறேன். வேறு யாரவது இருந்திருந்தால் கண்டிப்பாக தற்கொலைதான் செய்திருப்பார்கள்".
"ஐந்து ஆறு நாட்கள் என்னை விஜய் கிட்ட பேசவே விடல. அந்த படத்திற்கு பின் விஜய்யின் சம்பளம் இரண்டு மடங்காக ஆகிறது. படம் தோல்வி, அந்த படத்துக்கு பிரச்சனை ஆனால், ஹீரோவுக்கு என்ன நடக்குது, இந்த படத்துக்கு அவர் 25 கோடி சம்பளம் என்றால் அடுத்த படத்திற்கு 45 கோடி சம்பளத்தில் விஜய்யை தாணு புக் செய்தார். ஆனால், நம்மை துரோகிகளாக, தோல்வியடைந்தவனாக ஒதுக்க பார்க்கிறார்கள். பல ரகசியங்களை சொல்ல முடியாது".