திருமணம் குறித்து முதல் முறையாக அறிவித்த விஜய் டிவி புகழ்.. காதல் ஜோடி வெளியிட்ட புகைப்படம்
விஜய் டிவி புகழ்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் புகழ். குக் வித் கோமாளி சீசன் 2 முடிவில் 8 படங்களில் நடிக்கும் வாய்ப்பை புகழ் பெற்றார்.
அஜித், சூர்யா, சந்தானம் என முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வரும் புகழ், அடுத்ததாக Zoo keeper எனும் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
திருமணம் குறித்து அறிவித்த புகழ்
நடிகர் புகழ், பென்ஸ் ரியா என்பவரை காதலிப்பதாக கூறினார். இன்னும் சில மாதங்களில் தங்களுக்கு திருமணம் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலியுடன் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படத்துடன் ' Coming Soon ' என பதிவு செய்துள்ளார்.
இதனால், விரைவில் புகழுக்கு திருமணம் என உறுதியாகியுள்ளது. இதற்க்கு விஜய் டிவி நட்சத்திரங்களும், ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள்.