குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுத்த நாகேஷ் பேரன்.. கண்கலங்கிய புகழ்.. இவர்களுக்குள் இப்படியொரு உறவா
என்ட்ரி கொடுத்த நாகேஷ் பேரன்
குக் வித் கோமாளி சீசன் 4ல் இன்று இரு புதிய போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்துள்ளனர். இதில் முதல் ஆளாக நாகேஷ் பேரன் கஜேஷ் வந்தார். பின் கலை இயக்குனர் கிரண் என்ட்ரி கொடுத்தார்.
இதில் நாகேஷ் பேரன் உள்ளே வந்தவுடன் புகழ் ஷாக்காகிவிட்டார். ஓடிப்போய் அவரை கட்டிபிடித்துக்கொண்டார். ஏன் புகழ் மட்டுமே கஜேஷிடம் இவ்வளவு நெருக்கம் காட்டுகிறார் என முதலில் பலருக்கும் தெரியவில்லை.
இவர்களுக்குள் இப்படியொரு உறவா
ஆனால், அதன்பின் புகழ் அதற்கான காரணத்தை கூறினார். சினிமாவிற்கு புகழ் வருவதற்கு முன் பல மாதங்கள் கஜேஷ் தான் புகழுக்கு சாப்பாடு, உடுத்த உடை என அனைத்து விஷயங்களையும் பார்த்துக்கொண்டாராம்.
அப்படி நெருங்கிய நண்பர்களாக இருவரும் இருந்துள்ளனர். புகழ் தற்போது இப்படியிருக்க நிலையில் முக்கிய காரணங்களில் ஒருவர் கஜேஷ் என அவரே கூறியுள்ளார். இதனால் தான் கஜேஷை பார்த்தவுடன் கண்கலங்கிவிட்டார் புகழ்.
முதல் நாள் பொன்னியின் செல்வன் 2 வசூல் எவ்வளவு தெரியுமா.. இதோ பாருங்க

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
