மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜியை மறக்காத புகழ்- திருமணத்திற்கு பின் செய்த முதல் வேலை
நடிகர் புகழ்
குக் வித் கோமாளி நிகழ்ச்சி பல கலைஞர்களுக்கு வருங்காலத்தில் சாதனை பெற்ற ஒரு பிரம்மாண்ட மேடையாக இருந்துள்ளது. அப்படி இந்நிகழ்ச்சி மூலம் பெரிய அளவில் ரீச் பெற்றவர் புகழ்.
காமெடி கலந்து அந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களின் பேவரெட் நபரானார் புகழ்.
வலிமை, எதற்கும் துணிந்தவன், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் புதிய படங்கள் என அடுத்தடுத்து கமிட்டாகி பிஸியாக நடித்துவரும் புகழ் அண்மையில் தனது நீண்ட நாள் காதலி பென்ஸ் ரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களின் திருமணம் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சூழ கடந்த செப்டம்பர் 1ம் தேதி நடந்தது, மக்கள், பிரபலங்கள் அனைவருமே வாழ்த்து கூறினார்கள்.
வடிவேல் பாலாஜி-புகழ்
புகழ் சினிமாவில் இந்த அளவிற்கு ரீச் பெற முதலில் உதவியாக இருந்ததே மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜி தான். இவர் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
தற்போது திருமணத்தை முடித்த கையோடு புகழ் தனது மனைவியுடன் சேர்ந்து வடிவேல் பாலாஜியின் ஆசீர்வாதத்தை பெற்றுள்ளனர்.
இதோ புகழே போட்ட பதிவு,
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து குமரன் வெளியேறுகிறாரா?- ரசிகர்கள் ஷாக்

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
