ஷாருக்கானை முந்திய அல்லு அர்ஜுன்.. பாலிவுட்டில் மாஸ் காட்டிய புஷ்பா 2
புஷ்பா 2
அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படம் நேற்று வெளிவந்து வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. முதல் நாளே உலகளவில் இப்படம் ரூ. 275 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இதுவரை இந்திய சினிமாவில் வெளிவந்த எந்த படமும் முதல் நாள் ரூ. 275 கோடி வசூல் செய்ததே இல்லை. இதன்மூலம், முதல் நாள் அதிக வசூல் செய்த இந்திய படம் என்கிற சாதனை புஷ்பா 2 படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாருக்கானை முந்திய அல்லு அர்ஜுன்
உலகளவில் ரூ. 275 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள புஷ்பா 2, பாலிவுட்டில் ரூ. 65 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் பாலிவுட்டிலும் முதல் நாள் அதிக வசூல் செய்த படமாக புஷ்பா 2 இடம்பிடித்துள்ளது.
இதற்கு முன் ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் ரூ. 63 கோடி முதல் நாள் வசூல் செய்து, பாலிவுட்டில் முதல் இடத்தில் இருந்தது. அதனை தற்போது புஷ்பா 2 முந்தியுள்ளது. இனி வரும் நாட்களில் புஷ்பா 2 படம் என்னென்ன சாதனைகளை படைக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
