புஷ்பா 2 ஹீரோயின் பற்றி வந்த அப்டேட்! ஓரங்கட்டப்பட்ட ராஷ்மிகா?
அல்லு அர்ஜூனின் புஷ்பா படம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ், ஹிந்தி என மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகம் பெரிய ஹிட் என்பதால் அடுத்து எடுக்கப்போகும் இரண்டாம் பாகத்தை மேலும் பிரம்மாண்டமாக எடுக்க முடிவெடுத்து முதற்கட்ட பணிகளை செய்து வருகிறார் இயக்குனர்.
இந்நிலையில் தற்போது புஷ்பா 2ல் ஹீரோயினாக வெளிநாட்டு நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஷூட்டிங்கின் பெரும்பாலான பகுதியும் வெளிநாட்டில் தான் எடுக்கப்படும் என தெரிகிறது.
வெளிநாட்டு ஹீரோயின்
வெளிநாட்டு நடிகை ஹீரோயினாக நடிப்பதால் ராஷ்மிகா ரோலுக்கு இரண்டாம் பாகத்தில் அதிகம் இடம் இருக்காது என கூறப்படுகிறது.
மேலும் ஒரு டாப் பாலிவுட் நடிகையை ஒரு பாட்டுக்கு மட்டும் ஆட கேட்டு வருகிறார்களாம். முதல் பாகத்தில் ஊ சொல்றியா மாமா பாட்டுக்கு சமந்தா ஆடிய நிலையில் அது மிகப்பெரிய ஹிட் ஆனது.
அஜித்தை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்.. தினமும் வரும் போட்டோ பற்றி ட்ரோல்