பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள புஷ்பா 2 திரைப்படம்! மொத்தம் எத்தனை மொழிகளில் தெரியுமா

By Jeeva Jul 23, 2022 11:30 AM GMT
Report

புஷ்பா 2 படத்தின் பிரம்மாண்ட ரிலீஸ்

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் புஷ்பா.

இந்தியளவில் மெகா ஹிட் வரவேற்பை பெற்ற இப்படம் வசூல் சாதனைகளை நிகழ்த்தியது, இப்போதும் அப்பட பாடல்களை ரசிகர்கள் கொண்டாடி வருவதை பார்த்து வருகிறோம்.

அப்படியான இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துள்ளனர். மேலும் சமீபத்தில் புஷ்பா 2 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக வெளியான தகவல்கள் இணையத்தில் செம வைரலானது.

பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள புஷ்பா 2 திரைப்படம்! மொத்தம் எத்தனை மொழிகளில் தெரியுமா | Pushpa 2 Movie Update

இதனால் புஷ்பா 2 திரைப்படத்தில் அல்லு அர்ஜுன், விஜய் சேதுபதி, பகத் பாசில் என மூன்று முக்கிய நட்சத்திரங்களும் நடிப்பதால் ரசிகர்கள் செம விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.

இதற்கிடையே தற்போது புஷ்பா 2 குறித்த சில தகவல்கள் பரவி வருகிறது, அதன்படி இப்படம் மொத்தமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளதாம். இங்குள்ள மொழிகள் மட்டுமின்றி சர்வதேச மொழிகளிலும் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதம் துவங்கும் என்றும் படத்தின் ரிலீஸ் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள புஷ்பா 2 திரைப்படம்! மொத்தம் எத்தனை மொழிகளில் தெரியுமா | Pushpa 2 Movie Update

150 கோடிக்கும் மேல் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ! வரலாறு காணாத படுதோல்வி

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US