வசூலில் சாதனை படைத்த அல்லு அர்ஜுனின் புஷ்பா 2.. OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?
புஷ்பா 2
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகி கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றியடைந்த திரைப்படம் புஷ்பா 2. இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து புஷ்பா இரண்டாம் பாகம் வெளிவந்தது.
அல்லு அர்ஜூனுடன் இணைந்து இப்படத்தில் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில் ஆகியோர் நடித்திருந்தனர். ரூ. 250 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் வசூலில் டபுள் மடங்கு லாபம் ஈட்டி சாதனை படைத்தது.

டிசம்பர் 5ம் தேதி வெளியான இப்படம் எப்போது OTT தளத்தில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த நிலையில் தற்போது புஷ்பா 2 படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
எப்போது தெரியுமா?
அதன்படி, பிரபல OTT தளமான நெட்பிளிக்ஸில் 'புஷ்பா 2' தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஜனவரி 30 ம் தேதி வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri
இலங்கையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள்: பல கோடி மதிப்பிலான காணியை வழங்கிய நன்கொடையாளர் News Lankasri