விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 1800 கோடி வசூல் செய்த புஷ்பா 2.. எப்போது தெரியுமா
புஷ்பா 2
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான திரைப்படம் புஷ்பா 2. இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.
கடந்த ஆண்டு வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்தது. உலகளவில் ரூ. 1800 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இதன்மூலம் இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையையும் படைத்துள்ளது.
இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்து நம்பர் 1 இடத்தில் இருக்கும் புஷ்பா 2 திரைப்படம் OTT-யிலும் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ்நாட்டில் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவியில் புஷ்பா 2
இந்த நிலையில், தற்போது தமிழில் இப்படம் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் வருகிற தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ம் தேதி, மதியம் 3 மணிக்கு புஷ்பா 2 திரைப்படம் ஒளிபரப்பாகவுள்ளது. அதற்கான ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளனர்.