அனைவரும் எதிர்பார்த்த புஷ்பா 2 படத்தின் ட்ரைலர்.. எப்போது ரிலீஸ் தெரியுமா
புஷ்பா
கடந்த 2021ஆம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த படம் புஷ்பா தி ரைஸ். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார்.
மேலும் நடிகை சமந்தா ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார். ஆனால், புஷ்பா 2 படத்தில் அவருக்கு பதிலாக நடிகை ஸ்ரீலீலா நடனடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்த இப்படத்தின் இரண்டாம் பாகம், புஷ்பா தி ரூல் வருகிற டிசம்பர் 5ஆம் தேதி உலகளவில் வெளிவரவுள்ளது. இப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரைலர்
இந்த நிலையில், புஷ்பா 2 படத்தின் ட்ரைலர் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் புஷ்பா 2 படத்தின் ட்ரைலர், வருகிற 17ஆம் தேதி மாலை 6.03 மணிக்கு வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.


சுவர்களில் ஜேர்மன் வாசகம்., வீட்டிற்கு அடியில் ரகசிய பதுங்குகுழியை கண்டுபிடித்த பிரித்தானிய தம்பதி News Lankasri

Neeya Naana: காலையில் வைக்கும் சாதம் இரவு வரை கெட்டுப்போகாமல் இருக்குமா? அரங்கத்தில் பெண் கூறிய டிப்ஸ் Manithan
