என் கணவரும் நானும் காருகுள்ள தான் குடும்பம் நடத்தினோம்.. பிரபல நடிகர் சுந்தர்ராஜன் மனைவி வெளிப்படை

By Dhiviyarajan Feb 03, 2024 09:50 AM GMT
Report

சுந்தர்ராஜன்

நடிகர் சுந்தர்ராஜன், இவர் இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் எனப் பல பன்முகங்களை கொண்டவர். கடைசியாக இவர் 2013 ஆம் ஆண்டில் சித்திரையில் நிலாச்சோறு என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

தற்போது சுந்தர்ராஜன, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

என் கணவரும் நானும் காருகுள்ள தான் குடும்பம் நடத்தினோம்.. பிரபல நடிகர் சுந்தர்ராஜன் மனைவி வெளிப்படை | R Sundarrajan Wife Open Talk

சுந்தர்ராஜன் துர்கா என்ற டப்பிங் கலைஞரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு கார்த்திக், தீபன், அசோக் என 3 மகன்கள் உள்ளனர். இதில் ஒருவர் 2004ம் ஆண்டு கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

என் கணவரும் நானும் காருகுள்ள தான் குடும்பம் நடத்தினோம்.. பிரபல நடிகர் சுந்தர்ராஜன் மனைவி வெளிப்படை | R Sundarrajan Wife Open Talk

பேட்டி

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சுந்தர்ராஜனின் மனைவி பல விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அதில் அவர், " என்னுடைய கணவர் ஆரம்ப காலகட்டத்தில் பிஸியாக வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். அந்த சமயங்களில் காரில் தான் குடும்பம் நடத்தினோம்".

"என் கணவர் ஒரு இடத்தில் ஷூட்டிங்கில் இருப்பார். நான் ஒரு இடத்தில் டப்பிங் செய்துகொண்டு இருப்பேன். அப்போது காரில் வந்து சந்திப்பார் நாங்கள் குடும்ப பிரச்சனைகள், அடுத்து என்ன செய்வது என்பதை காருக்குள் வைத்து தான் பேசுவோம்"

மேலும் அவர் கூறுகையில், "என் கணவர் என்னை எந்த இடத்திலும் விட்டுக் கொடுத்தது கிடையாது. அதுபோல அவர் கோபப்பட்டால் நான் சமாதானம் செய்வேன். நான் கோபம் அடைந்தாள் அவர் சமாதானம் செய்வார். இந்த வயதிலும் நாங்கள் காதலித்து வருகிறோம்" என்று சுந்தர்ராஜனின் மனைவி துர்கா தெரிவித்து உள்ளார். 

என் கணவரும் நானும் காருகுள்ள தான் குடும்பம் நடத்தினோம்.. பிரபல நடிகர் சுந்தர்ராஜன் மனைவி வெளிப்படை | R Sundarrajan Wife Open Talk

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US