ராதிகா சரத்குமாரின் மகன் நடிக்க வருகிறாரா.. வெளிவந்த தகவல்
ராதிகா - சரத்குமார்
நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமிக்கு சமீபத்தில் தான் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து சரத்குமாரின் மகன் குறித்து தகவல் ஒன்று உலா வருகிறது.
நடிகை ராதிகாவிற்கும், சரத்குமாருக்கு பிறந்தவர் தான் ராகுல் சரத்குமார். இவர் சமீபத்தில் தான் தனது படிப்பை முடித்தார்.

இவரும் தனது தாய், தந்தையை போலவே சினிமாவில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சரத்குமாரிடம் சமீபத்தில் கேள்வி கேட்டகப்பட்டது. நடிகர் சரத்குமார் அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
ஹீரோவாகிறாரா ராகுல்
அப்போது, சூர்யவம்சம் 2 குறித்தும் பேசினார். நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த கோபிநாத் 'சூர்யா வம்சம் 2-னா, அப்போ சின்ன சரத்குமாராக, உங்களுடைய மகன் ராகுல் சரத்குமார் நடிப்பாரா' என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சரத்குமார் 'இல்லை அவருக்கு சினிமாவில் ஆர்வம் இல்லை. கால்பந்து விளையாட்டில் தான் ஆர்வம் அதிகமாக இருக்கிறது' என கூறினார். இதன் மூலம் ராதிகா - சரத்குமாரின் மகன் ராகுல் சினிமாவில் வரமாட்டார் என தெரியவந்துள்ளது.
9 சிக்ஸர்களுடன் 49 பந்துகளில் 100 ஓட்டங்கள்! ஷபாலி வெர்மாவின் மிரட்டலில்..இந்தியா அபார வெற்றி News Lankasri
34 பில்லியன் சொத்து இருந்தும் மகளின் ஸ்டார்ட்அப்புக்கு நிதியளிக்க மறுத்த மெலிண்டா கேட்ஸ் News Lankasri