த்ரிஷாவின் ராங்கி 10 நாள் வசூல் இவ்வளவு தானா! படம் லாபமா, நஷ்டமா?
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் த்ரிஷா. பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபத்திரத்தில் நடித்த த்ரிஷாவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
சமீபத்தில் இவர் நடிப்பில் ராங்கி திரைப்படம் திரையரங்கில் வெளியானது. ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து உள்ளது.

லாபமா? நஷ்டமா?
இந்நிலையில் பேட்டி ஒன்றில் படத்தின் பட்ஜெட் குறித்து த்ரிஷா பேசியுள்ளார். அதில் அவர் "முதலில் நான் சுபாஷ் கரனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். உஸ்பெகிஸ்தானுக்கு நங்கள் இரண்டு வாட்டி சென்றோம். முதல் தடவை அங்கு எடுக்கப்பட்ட சில காட்சிகள் சரியாக வரவில்லை.”
”அதனால் இரண்டாவது முறை சென்றோம். 'படத்தின் தரம் தான் முக்கியம்' என சுபாஷ் கரண் கூறினார். ஹீரோயின்கள் படம் என்றால் பட்ஜெட் பிரச்சனை இருக்கும். ஆனால் தயாரிப்பு நிறுவனம் இப்படத்திற்கு முழு சப்போர்ட் கொடுத்தனர்" என்று கூறியுள்ளார்.
ராங்கி படத்தின் பட்ஜெட் 15 - 20 கோடி என தகவல் கூறப்படுகிறது. தற்போது இப்படம் 10 நாட்களில் 1.39 கோடி ரூபாய் வசூல் மட்டுமே செய்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

கர்நாடகாவில் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே துணிவு இத்தனை கோடி வசூலித்ததா?